நெல்லை அருகே, திருமணமாகாத விரக்தியில் இளைஞர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திசையன்விளை மணலிவிளை யாதவர் தெற்கு தெருவை சேர்ந்தவர் மரம் வெட்டும் தொழிலாளி வரதராஜன். இவர் மணலிவிளை முத்தாரம்மன் கோயிலில் சுடலைமாட சுவாமிக்கு சாமியாடுபவர் எனக் கூறப்படுகிறது. வரதராஜனுக்கு 33 வயதாகியும் திருமணமாகாத நிலையில், மதுப்பழக்கம் காரணமாக, குடல்வால் அலர்ச்சி மற்றும் கணையம் வீக்கம் சம்பந்தமாக வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், வரதராஜன் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, வரதராஜன் வயிற்று வலி காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்தாரா ? அல்லது திருமணமாகாத விரக்தியில் தற்கொலை செய்தாரா ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
-