தமிழ்நாடு

மருமகளுடன் தகாத உறவில் மாமனார்.. பங்குக்கு வந்த நண்பன்.. கடைசியில் அஸ்தி வைத்த பயங்கர ட்விஸ்ட்

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை சேர்ந்தவர் முதியவர் ரெங்கசாமி கூலி தொழில் செய்து வருகிறார். மனைவி உயிரிழந்த நிலையில் தனியாக வசித்து வருகிறார். மகன்கள் மற்றும் மகளுக்கு திருமணமான நிலையில் கோயம்புத்தூரில்

தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ரெங்கசாமியை காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார். இது தொடர்பாகத் தனியார் மருத்துவமனையில் காவலாளியாக வேலை பார்த்து வரும் கோவிந்தராஜை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளன.

கோவிந்தராஜ் மகன் குடும்பத்தினருடன் பண்ணக்காரன்பட்டியில் வாழ்ந்து வந்தார். அப்போது மருமகள் ஈஸ்வரியுடன் அவருக்குத் தகாத உறவு ஏற்பட்டு இருக்கிறது. இந்த விஷயம் அவருடன் அடிக்கடி சீட்டு விளையாடும் ரெங்கசாமிக்கு தெரியவந்து இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ரெங்கசாமிக்கும் ஈஸ்வரியுடன் தகாத உறவு ஏற்பட்டு இருக்கிறது. தொடர்ந்து ஈஸ்வரி குடும்பத்துடன் ரெங்கசாமி வீட்டில் ஒரு மாத காலம் தங்கி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தராஜ் ரெங்கசாமியை தனது வீட்டிற்கு வரவழைத்து அடித்து கொலை செய்து உடலைச் சாக்கு மூட்டையில் கட்டி அருகில் உள்ள பகுதிக்குக் கொண்டு சென்று தீவைத்து எரித்ததாக கோவிந்தராஜ் வாக்குமூலம் அளித்து இருக்கிறார். இதனை தொடர்து போலீசார் கோவிந்தராஜை கைது செய்தனர். 

Gas Booking | மக்களே உடனே பண்ணுங்க.. இதை செய்யலனா கேஸ் புக் செய்ய முடியாது

Toxic |பட விழாவில் கடும் கூட்ட நெரிசல் - பேசி கொண்டிருக்கும்போதே சரிந்து விழுந்த ரசிகர்கள்

Students Protest ``கல்லூரி மாணவர்கள் போராட தடை?’’ - விளக்கம் கேட்டு பறந்த உத்தரவு

CPM ``உங்களுக்கு கம்யூ., கட்சி வேணுமா.. இல்ல அதிகாரிகள் வேணுமா’’ - கடும் எதிர்ப்பால் அரசு அதிரடி

New Tamil Movie Release | தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் நிறுத்தம்