தமிழ்நாடு

ஃபைன் கேட்டு மிரட்டியவரை விரட்ட வந்த அதிகாரிகள்.. ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த ஹோட்டல் ஓனர்..

தந்தி டிவி

பழனியில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி போல் நடித்து பணம் கேட்டு மிரட்டிய நபரை கடைக்காரர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வயலூரை சேர்ந்தவர் குமார். உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி போல் பேசி, பழனியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சோதனை நடத்திய இவர், தான் கூறும் நம்பருக்கு 3 ஆயிரம் ரூபாய் ஜிபே செய்யும் படி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதில், ஹோட்டல் உரிமையாளர் சந்தேகமடைந்து, உணவு பாதுகாப்புத்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பந்தப்பட்ட கடைக்கு விரைந்த அதிகாரிகள், குமாரை பிடித்து விசாரணை நடத்தி இருக்கின்றனர். விசாரணையில் பல கடைகளில் இதே போல் நபர் கைவரிசை காட்டி இருப்பது தெரியவர, அவரை பிடித்து போலீசாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்