Dindigul Thalappakatti Restaurant | `திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி' - கோவையில் புதிய கிளை திறப்பு.. சிறப்பு விருந்தினராக வந்த நடிகை பிரீத்தி முகுந்தன் கோவை நவ இந்தியா பகுதியில் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி உணவகத்தின் புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது.. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகை பிரீத்தி முகுந்தன், இந்த புதிய கிளையைத் தொடங்கி வைத்தார். திறப்பு விழாவில் பேசிய தலப்பாகட்டி நிர்வாகத் தலைவர் நாகசாமி தனபாலன், உலகளவில் தங்களுக்குக் கிடைத்து வரும் பெரும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார். மேலும், தங்களது பாரம்பரிய பிரியாணி தயாரிப்பு முறையின் ரகசியம் மாறாமல், இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருவதே தங்கள் உணவின் தனிச்சிறப்பு என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய தலைமைச் செயல் அதிகாரி செந்தில்குமார், புதிய கிளையில் சைவ உணவு பிரியர்களுக்கெனத் தனி மெனுவுடன் 'அன்லிமிடெட் மீல்ஸ்' வசதியும் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.