தமிழ்நாடு

கற்ற கல்வியின் மூலமாக வீடு தேடி வேலை வரும் - திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நந்தனார்புரம் கிராமத்தில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நந்தனார்புரம் கிராமத்தில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், படிப்பை முடித்து விட்டு அனைவரும், தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் தேர்வு எழுத வேண்டும் என்றார். கற்ற கல்வியின் மூலமாக வீடு தேடி அந்த வேலை வரும் என்றும், வேறு யாரையும் நம்ப வேண்டாம் என்றும் அமைச்சர் சீனிவாசன் கேட்டுக்கொண்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்