தமிழ்நாடு

Dindigul | Shop Attack | திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் உள்ள கடையை சல்லி சல்லியாக நொறுக்கிய கும்பல்

திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் உள்ள கடையை சல்லி சல்லியாக நொறுக்கிய கும்பல்

thanthitv

திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் உள்ள கடையை சல்லி சல்லியாக நொறுக்கிய கும்பல்

பைக் மோதியதில் தகராறு - கடையை அடித்து நொறுக்கிய கும்பல் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் உள்ள கடையை ஆறு பேர் கொண்ட கும்பல் அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் உள்ள கடையில் வேலை பார்ப்பவர் வேல்முருகன். இவரது இருசக்கர வாகனமும் நந்தகோபால் என்பவரது இருசக்கர வாகனமும் மோதியதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஆட்களை கூட்டி வந்த நந்தகோபால், வேல்முருகன் வேலை பார்க்கும் கடையை அடித்து நொறுக்கினார். மேலும் வேல்முருகனுக்கும் அவரது கடை உரிமையாளருக்கும் கொலை மிரட்டலும் விடுத்து சென்றார். இந்த புகாரில் நந்தகோபால் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு