ஊரில் உள்ள பெண்களையெல்லாம் மொட்டையடித்து தலைமறைவான பெண் - சொகுசாக வாழ நினைத்த டைமில் கிடுக்கிப்பிடி போட்ட மக்கள் #Dindigul #Moneylaundering #thanthitv #scam பாதிக்கப்பட்டவர்களிடம் வசமாக சிக்கிய பணமோசடி பெண் ஆர்.எம்.காலணி பகுதியை சேர்ந்த இலங்கை தமிழரான ஆனந்தி, ஸ்ரீடிரஸ்ட் என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வந்தார். இந்த தொண்டு நிறுவனத்தின் மூலம், “பெண்களுக்கு ஒரு லட்ச ரூபாய் கடன் பெற்றுத்தரப்படும். 90 ஆயிரத்தை மட்டும் திருப்பி தந்தால் போதும். கடனை வழங்க ஐந்தாயிரம் ரூபாய் மட்டும் டெபாசிட் செய்ய வேண்டும்“ எனக்கூறி பல பேரிடம் பணம் வசூலித்துள்ளார். பின்னர் இவர் தலைமறைவாகவே, பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்நிலையில் தலைமறைவான ஆனந்தி, திண்டுக்கல் புறநகர் பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வருவது பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிய வந்தது. வீடு கட்டும் இடத்திற்கே சென்று பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டனர். அவர்களை சமாளிக்க முடியாத ஆனந்தி, அந்த இடத்தை விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றார்.