திண்டுக்கல் ஆர்.எம்.காலனியை சேர்ந்த, மோகன் என்பவர் தனது 2 சக்கர வாகனத்தில் பணம் வைத்திருந்தார். வங்கிக்கு பணம் செலுத்த உள்ளே சென்ற போது, நோட்டமிட்ட மர்மநபர்கள், இரு சக்கர வாகன பெட்டியின் பூட்டை உடைத்து, ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றனர். புகாரின் பேரில் கனரா வங்கி அருகே, பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியை கைப்பற்றிய போலீசார் மர்மநபர்கள் 3 பேரை தேடி வருகின்றனர்.