தமிழ்நாடு

கொலைக் குற்றவாளி கூட்டாளியுடன் தப்பியோட்டம் - பிடிபட்ட ஐவருக்கு சிறை,முக்கிய குற்றவாளிக்கு வலை

கொலைக் குற்றவாளியை தேடியபோது, அவனது கூட்டாளிகள் 5 பேரை கைது செய்த போலீசார், தப்பிய முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.

தந்தி டிவி
திண்டுக்கல்லில் வாகன சோதனையின் போது தகராறு செய்து தப்பிய கொலைக் குற்றவாளி அல் ஆஷிக்-ஐ போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், தமது கும்பலுடன் வேடசந்தூர் பகுதியில் ஆஷிக் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அங்கு வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீசார், கூட்டாளிகளுடன் வந்த ஆஷிக்கை மடக்கினர். அதில், 2 இருசக்கர வாகனங்களுடன் 5 பேரை கைது செய்த போலீசார், அனைவரையும் சிறையில் அடைத்தனர். ஆனால், காரில் ஆஷிக் தப்பி விட்டான். அவனை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், ஆஷிக்கை பிடிக்கும் போலீசாருக்கு ஆதரவாக சமூக வளைதளத்தில் பதிவிட்ட இந்து முன்னணி பிரமுகர் உள்ளிட்ட முக்கிய நபர்களை ஆஷிக் கொலை செய்ய திட்டமிட்டு அங்கு முகாமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி