தமிழ்நாடு

மாயமான மகள்.. தவிக்கும் தகப்பன்.. இரண்டு நாட்களாக அலட்சியம் காட்டிய போலீஸ்.. காவல்நிலையத்தில் கொந்தளித்த தந்தை.. திண்டுக்கலில் பரபரப்பு சம்பவம்

தந்தி டிவி

காணாமல் போன மகளை கண்டுபிடித்து தருமாறு கொடுத்த புகாரை, போலீசார் பெற மறுப்பதாக கூறி திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை மகளிர் காவல் நிலையம் முன்பு நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள குரும்பபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி. வெல்டிங் பட்டறை வைத்து நடத்தி வரும் இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில், இரண்டாவது மகள் திண்டுக்கல்லில் உள்ள அரசு கூட்டுறவு பயிற்சி கல்லூரியில் டிப்ளமோ படித்து முடித்த நிலையில், சம்பவத்தன்று கல்லூரிக்கு சான்றிதழ் பெறச் சென்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து நீண்ட நேரமாகியும் மகள் வீடு திரும்பாததால் பதறிப்போன ராஜாமணி, மகளின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்திருக்கிறார். இது குறித்து புகாரளிக்க வடமதுரை காவல் நிலையம் சென்ற ராஜாமணியை,

வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று புகாரளிக்குமாறு போலீசார் அறுவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதன்படி அங்கு சென்ற ராஜாமணி, புகாரை பெறாமல் போலீசார் அலைக்கழிப்பதாக கூறி காவல்நிலையம் முன் தான் தற்கொலை செய்யப்போவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின் அவரை சமாதானம் செய்த போலீசார், புகாரை பெற்றிருக்கின்றனர்.

India | USA | ஜெய்சங்கர்-மார்கோ ரூபியோ சந்திப்பு.. விரைவில் இந்தியா-அமெரிக்கா கையெழுத்து..?

Sriperumbudur Missing Girl | மாயமான 8 வயது சிறுமி - "வற்புறுத்திய தாய்.." - திடுக் தகவல்கள்

CM Vijay| மகிழ்ச்சியோடு CM விஜய் அறிவிப்பு

Crime | சென்னை பாரிஸில் பெரும் சம்பவம் - தோண்ட தோண்ட.. அதிர்ந்த போலீஸ்

BREAKING || தனிக்கட்சியா, அதிமுகவில் இணைவா? தனுஷின் பொலிடிகல் மூவ்? - கணிக்கும் சித்தார்த்