தமிழ்நாடு

பையை திருடிக்கொண்டு ஓடிய சிறுவன் "பசியால் தான் திருடினேன்" - பரிதாப காட்சி

முதியவரின் கையில் இருந்து பையை பறித்துக் கொண்டு ஓடிய சிறுவன் பொதுமக்கள் கையில் பிடிபட்டான். பசியால் திருடியதாக கதறி அழுத‌ சிறுவன், மக்கள் தந்த டீ வடையை சாப்பிட்டு பசியாறிய காட்சி பரிதாபத்தை ஏற்படுத்தியது.

தந்தி டிவி

முதியவரின் கையில் இருந்து பையை பறித்துக் கொண்டு ஓடிய சிறுவன் பொதுமக்கள் கையில் பிடிபட்டான். பசியால் திருடியதாக கதறி அழுத‌ சிறுவன், மக்கள் தந்த டீ வடையை சாப்பிட்டு பசியாறிய காட்சி பரிதாபத்தை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் பழனி ரோட்டில் உள்ள ஒரு டீக்கடையில் முதியவர் ஒருவர் மஞ்சள் பையை, கையில் வைத்துக் கொண்டு டீ அருந்தி கொண்டிருந்த போது, சிறுவன் ஒருவன் அந்த பையை பறித்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளான். இதை கண்ட அங்கிருந்த மக்கள் சிறுவனை துரத்தி பிடித்தனர். கையில் இருந்து பையை வாங்கி பார்த்தபோது அதில் பணம் எதுவும் இல்லை. வாழைப்பழங்கள் தான் இருந்தன. இதையடுத்து சிறுவனிடம் விசாரித்த போது, சிறுவன் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவன் எனவும், பசியால் திருடி விட்டதாகவும் கூறி கதறி அழுதுள்ளான். இதை கண்டு மனமிறங்கிய மக்கள், சிறுவனுக்கு டீ, வடை வாங்கி கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த திண்டுக்கல் மேற்கு காவல்நிலைய போலீசார், சிறுவனை அழைத்து சென்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்