தமிழ்நாடு

Dindigul Incident |பட்டாக்க*தியுடன் வந்து மளிகை கடையை சூறையாடிய இளைஞர் | பதறவைக்கும் சிசிடிவி காட்சி

thanthitv

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள சுக்காம்பட்டியைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவர் அதே பகுதியில் அதிமுக வார்டு கவுன்சிலராக உள்ளார். இவரது மனைவி அஞ்சலை மளிகைக் கடை நடத்தி வருகிறார். சேடப்பட்டியை சேர்ந்த ஹவுஸ் பாண்டி என்பவருக்கும், தண்டபாணிக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. மேலும், ஹவுஸ் பாண்டி மீது கொலை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஹவுஸ் பாண்டியின் கூட்டாளியான ஆதி என்பவர், அஞ்சலையின் மளிகைக் கடைக்கு சென்று மாமூல் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. மாமூல் தர மறுத்ததால் பட்டாக் கத்தியால் கடையை அடித்து நொறுக்கி சூறையாடிய அதிர்ச்சிகர சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. இந்த நிலையில், வேடசந்தூர் காவல் நிலையத்தில் தண்டபாணி மற்றும் அஞ்சலை புகார் அளித்துள்ளனர். போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்