திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சட்ட அலுவலகத்தை இடிக்க விடாமல் வழக்கறிஞர்கள், நடத்திய வாக்குவாதம் போராட்டமாக உருவெடுத்து பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிமன்ற உத்தரவின்படி நிலக்கோட்டை பேருந்துநிலையத்தில் அனுமதியின்றி இயங்கிவந்த கடைகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது வழக்கறிஞர் ஒருவரின் சட்ட அலுவலகமும் இடிக்கப்பட்டது. இதனை கண்டித்து வழக்கறிஞர்கள் ஒன்று கூடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் அந்த அறையை இடிக்க முயல, வழக்கறிஞர்கள் பாதி இடிந்த அந்த அறையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.