தமிழ்நாடு

6 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை : குற்றவாளிகளை கைதுசெய்ய கோரி உறவினர்கள் சாலை மறியல்

திண்டுக்கல் அருகே ரங்கநாதபுரம் கிராமத்தில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

திண்டுக்கல் அருகே ரங்கநாதபுரம் கிராமத்தில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விடுமுறை தினமான நேற்று வீட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுமி திடீரென மாயமாகி உள்ளார். பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடிய நிலையில், அங்குள்ள தோட்டத்தில் காயமடைந்த நிலையில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்காக உடல் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்ட நிலையில், குற்றவாளிகளை கைதுசெய்ய கோரி பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிறுமி மரணம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்