#salam #digitalscams பள்ளிக்கல்வித் துறை பெயரில் ரூ.58,000 டிஜிட்டல் மோசடி - சேலத்தில் அதிர்ச்சி சம்பவம் சேலம் மாவட்டம் ஓமலூரில், உயர்கல்வி உதவித்தொகை வழங்குவதாகக் கூறி தச்சுத் தொழிலாளியிடம் 58 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. தச்சுத் தொழிலாளியான ரமேஷ் என்பவரின் மகளுக்கு உதவித்தொகை வழங்குவதாகக் கூறி மர்ம நபர்கள் தொலைபேசியில் பேசியுள்ளனர். அரசு இலச்சினையுடன் காணொலி அழைப்பு மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து ரமேஷின் வங்கி விவரங்களை பெற்ற அந்த கும்பல், QR குறியீடு மூலம் அவரது வங்கி கணக்கில் இருந்து 58 ஆயிரம் ரூபாயை தங்களது கணக்கிற்கு மாற்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மர்ம கும்பல் இணைப்பை துண்டித்துள்ளனர். பாதிக்கப்பட்ட ரமேஷ், சேலம் சைபர் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அரசு உதவித்தொகை அல்லது கடன் வழங்குவதாக வரும் போலி அழைப்புகளை நம்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.