Chennai || முதலமைச்சர் வழங்கிய தற்காலிய பணியை நிராகரித்த மாற்றுத்திறனாளி புதுக்கோட்டையில் முதலமைச்சர் வழங்கிய தற்காலிக அரசு பணியை மாற்றுத்திறனாளி ஒருவர் நிராகரித்துள்ளார். கடந்த 2 ஆம் தேதி புதுக்கோட்டை வந்த முதலமைச்சர் விஜயிடம் தனக்கு அரசு பணி வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளி குமார் மற்றும் அவரது சகோதரி ஜெயா ஆகியோர் கோரிக்கை விடுத்த நிலையில், மறுநாளே அவருக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லிப்ட் ஆப்பரேட்டராக தற்காலிக பணி வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரை சந்தித்து இந்த பணியை நிராகரித்துள்ள குமார், எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள தனக்கு அலுவலக உதவியாளராக நிரந்தர பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். #TamilNaduPolitics #TVK #cmvijay #ThanthiTV