தமிழ்நாடு

பேசின் பிரிட்ஜ்- ஈ.வெ.ரா. சாலை சந்திப்பில் வடிகால் தேவை - நெடுஞ்சாலைகள் துறை இயக்குநரிடம் தயாநிதி மாறன் எம்.பி., மனு

வட சென்னை வால்டாக்ஸ் சாலையில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கக்கோரி, மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதிமாறன் மனு அளித்துள்ளார்.

தந்தி டிவி

வட சென்னை வால்டாக்ஸ் சாலையில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கக்கோரி, மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதிமாறன் மனு அளித்துள்ளார். தலைமை செயலகத்தில் நெடுஞ்சாலைகள் துறை முதன்மைச் செயலர் கார்த்திக்கை சந்தித்த அவர், ஈ.வே.ரா நெடுஞ்சாலை மற்றும் பேசின் பிரிட்ஜ்யை இணைக்கும் வால்டாக்ஸ் சாலையில், வடிகால் அமைக்க வலியுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதிமாறன், ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட கால்வாயில், மழைநீர் வடிகால் செயலற்று உள்ளது என்றார். சென்னையில் 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் வீடுகளில் புகுந்து, அப்பகுதியினர் அவதியுற்றதாக தெரிவித்தார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு