தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் அமைந்துள்ள, ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமையான தக்ஷின காசி காலபைரவர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமியை ஓட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விபூதி அலங்காரத்தில் காட்சி அளித்த கால பைரவரை, ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டதுடன், காணிக்கைகளையும் செலுத்தினர். இந்தியாவில் காசிக்கு அடுத்து, கால பைரவருக்கென அமைந்துள்ள ஒரே கோயில் இது என்பது குறிப்பிடத்தக்கது.