மயிலாடுதுறையில், ஆதீனம் மகப்பேறு மருத்துவமனையை இடித்து நகராட்சி அலுவலகம் கட்டும் பணி நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ள நிலையில், இதற்கு தருமபுரம் ஆதினம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஐதராபாத் ஆன்மீக நிகழ்ச்சிக்கு சென்றுள்ள 27வது குருமஹா சன்னிதானம், இதுதொடர்பாக சமூகவலைதள பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மருத்துவமனையை இடிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் இருக்கப் போவதாக கூறியுள்ளார்.