தமிழ்நாடு

மோஷன் போஸ்டர் வெளியீடு : தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம் - தனுஷ் வருகிறார் என்ற தகவலால் குவிந்த ரசிகர்கள்

நெல்லையில் தமது படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட நடிகர் தனுஷ் வர உள்ளதாக வெளியான தகவலால், அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.

தந்தி டிவி

நெல்லையில் தமது படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட நடிகர் தனுஷ் வர உள்ளதாக வெளியான தகவலால், அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். தனுஷின் 40வது திரைப்படமான ஜகமே தந்திரம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. இதனையடுத்து நெல்லை ராம் திரையரங்கு முன் திரண்ட தனுஷ் ரசிகர்கள் மூன்று அடி நீளமுள்ள வாளால் கேக் வெட்டி கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து அந்த வாளை பறிமுதல் செய்த போலீசார், ரசிகர் ஒருவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதனிடையே அங்கு தனுஷ் வர உள்ளார் என தகவல் வெளியானதால் ஏராளமான ரசிகர்கள் திரையரங்கு முன் குவிந்தனர். இதனையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்