தமிழ்நாடு

டிஜிபி ராஜேந்திரன் பணி நியமன வழக்கு : தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு

தமிழக காவல் துறை தலைவர் ராஜேந்திரனின் பணி நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால தடை விதிக்க, உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுத்து தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
மதுரையைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், குட்கா முறைகேடு தொடர்பான ஆவணங்களை மறைத்து காவல் துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் பதவி நீட்டிப்பு பெற்றுள்ளதாகவும், எனவே பணி நீட்டிப்புக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தலைமை செயலர், டிஜிபி, வருமான வரித்துறை, சிபிஐ இயக்குநர் உள்ளிட்டோருக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பவும், டிஜிபி பணி நியமனத்துக்கு தடை விதிக்க முடியாது எனவும் தெரிவித்து, வழக்கை வரும் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை