தமிழ்நாடு

காவல்துறையில் நேரடி ஐ.பி.எஸ் பதவிகளுக்கு நியமிக்க கூடாது - தமிழக அரசு தலைமை செயலாளருக்கு டி.ஜி.பி. ஜாங்கிட் கடிதம்

நேரடி ஐ.பி.எஸ். பதவிகளுக்கு பதவி உயர்வு மூலம் ஐ.பி.எஸ். அந்தஸ்து பெறும் அதிகாரிகளை நியமிக்க கூடாது என தமிழக அரசுக்கு, டி.ஜி.பி. ஜாங்கிட் கடிதம் எழுதியுள்ளார்.

தந்தி டிவி
.போக்குவரத்து துறை ஊழல் தடுப்பு பிரிவு இயக்குநராகவும் ,டிஜிபியாகவும் உள்ள ஜாங்கிட், தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதில், தமிழக காவல்துறையில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பலரிடமிருந்து பல்வேறு முறையீடுகள், ஐ.பி.எஸ் அதிகாரிகள் சங்கத்திற்கு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.நேரடி ஐபிஎஸ் அதிகாரிகள் தேவையான அளவிற்கு இருந்தும், தமிழக காவல்துறையில் முக்கிய பதவிகளுக்கு பதவி உயர்வு மூலம் ஐபிஎஸ் அந்தஸ்து பெறும் அதிகாரிகள் நியமிக்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.இதனால் நேரடியாக ஐ.பி.எஸ்.பதவிக்கு தேர்வு பெற்ற இளம் அதிகாரிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாகவும், தகுதியான நேரடி ஐ.பி.எஸ். அதிகாரிகள் இல்லாத சூழ்நிலையில் மட்டுமே பதவி உயர்வால் ஐ.பி.எஸ். அந்தஸ்து பெற்ற அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனத்தில் உரிய சட்டவிதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும்,அமல்படுத்தாத பட்சத்தில் சட்ட நடவடிக்கைகளை அணுக வேண்டிய நிலை ஏற்படும் எனவும், அந்த கடிதத்தில் ஜாங்கிட் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்