தமிழ்நாடு

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் தேர்தல் டிஜிபி ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தந்தி டிவி

நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தேர்தல் முடியும் வரை தமிழக டிஜிபியாக அசுதோஷ் சுக்லாவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இதையடுத்து டிஜிபி அலுவலகத்தில் அனைத்து மாவட்ட காவல் அதிகாரிகளுடனும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த கூட்டத்தில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்,

கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் பங்கேற்றனர். சென்னையில் உள்ள மொத்த வாக்குப் பதிவு மையங்கள், பதற்றமான வாக்குச் சாவடிகள், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்