தமிழ்நாடு

ஐயப்பன் கோவிலில் 67ம் ஆண்டு திருவிழா விமர்சையாக கொண்டாட்டம்...

மதுக்கரையில் உள்ள ஐயப்பன் கோவிலில் 67ம் ஆண்டு திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.

தந்தி டிவி

கோவை மாவட்டம் மதுக்கரையில் உள்ள ஐயப்பன் கோவிலில் 67ம் ஆண்டு திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. நேற்று மாலை முதல் நள்ளிரவு 2 மணி வரை நீடித்த இந்த விழாவில், மூன்று கும்கி யானைகளுடன் ஐயப்பன் திருவீதி உலா, செண்டை மேளம் முழங்க நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசித்தனர். விழாவின் நிறைவாக சுமார் ஒரு மணி நேரம் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

ரதத்தில் அய்யப்பசுவாமி ஊர்வலம்

இதேபோல, மேட்டுப்பாளையம் சிவன்புரத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில், நடைபெற்று வந்த 28 வது மண்டல மகோற்சவ நேற்று நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன. இதையொட்டி நேற்று மாலை ஸ்ரீஅய்யப்பசுவாமி ஊர்வலம் நடைபெற்றது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய ரதத்தில் எழுந்தருளிய ஸ்ரீஅய்யப்பசுவாமி, பெண்கள் தீபங்கள் ஏந்திவர, பஞ்சவாத்தியங்கள் முழங்க, முக்கிய சாலைகள் வழியாக சென்று கோவிலை அடைந்தார்.

Kovai ``14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை’’ - கோவையை பதறவைத்த சம்பவத்தின் அப்டேட்

Chengalpattu Accident செங்கல்பட்டு சாலையில் அடுத்தடுத்து 7 கார்கள் மோதி பயங்கர விபத்து

Chennai Crime டையப்பரில் மறைக்கப்பட்ட ரூ.1கோடி `விபரீதம்’ - சர்வதேச தொடர்பா என கிடுக்கிபிடி விசாரணை

Haryna வேண்டுமென்றே இடித்த கார்.. இழுத்து செல்லப்பட்ட பெண் ரைடர் - குலைநடுக்க வீடியோ

Bank | அடகு வைத்த நகைகளுக்கு பதில் போலி நகைகள்.. பேங்கிலேயே மெகா மோசடி