தமிழ்நாடு

உடலில் சேறு பூசிக் கொண்டு வழிபடும் விநோத திருவிழா...

உடலில் சேறு பூசிக் கொண்டு வழிபடும் விநோத திருவிழா, கொடைக்கானலில் நடைபெற்றது.

தந்தி டிவி

கொடைக்கானலில் கீழ்மலை பகுதியில் உள்ள தாண்டிக்குடி கிராமத்தில், பட்டாளம்மன் முத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. கடந்த 15 நாட்களாக நடைபெற்று வந்த இந்த திருவிழாவின் இறுதி நாளான இன்று, சுவாமிக்கு 'சேத்தாண்டி' வேடம் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சுற்று வட்டார மலை கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்கள் பங்கேற்று உடல் முழுவதும் சேறு பூசிக் கொண்டனர். பின்னர், ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக சென்று முத்தாலம்மனை வேண்டினர். கலர் பொடிகளை தூவியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோல, சேறு பூசி வேண்டினால், விவசாயம் செழிக்கும் எனவும் நோய் அண்டாது எனவும் கிராம மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே