பிளாஸ்டிக் பாட்டில் உள்ளிட்டவைகளை அழிக்க நவீன மறுசுழற்சி இயந்திரத்தின் செயல்பாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில், இந்த நிகழ்ச்சி நடந்தது. பரிசோதனை அடிப்படையில் தமிழகம் முழுவதும் 500 இடங்களில் பிளாஸ்டிக்கை அழிக்கும் நவீன இயந்திரம் வைக்கப்பட உள்ளது. 2 ஆயிரத்து 500 பிளாஸ்டிக் கேன்கள் மற்றும் அலுமினிய கேன்களை இதில் நசுக்கி சேமித்து வைக்க முடியும் எனக் கூறப்படுகிறது.