கடுமையாக எச்சரித்து அமைச்சர் போட்ட உத்தரவை மீறி.. உள்ளே புகுந்து தவெகவினர் செய்த அதிர்ச்சி செயல்
சாத்தூர் அரசு பள்ளியில் தவெகவினர் ஆய்வு -அமைச்சர் உத்தரவை மீறிச் செயல்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேலபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்குள் நுழைந்த தவெக விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் சின்னப்பர் மற்றும் ஒன்றிய செயலாளர் விஜயசாரதி ஆகியோர், மாணவ-மாணவியருக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதுமட்டுமின்றி, மாணவர்களுடன் அமர்ந்து அவர்கள் உணவையும் சாப்பிட்டனர். பள்ளி நேரத்தில் கட்சியினரோ அல்லது வெளியாட்களோ யாரும் பள்ளிக்குள் நுழைந்து மாணவர்களைச் சந்திக்கக் கூடாது எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஏற்கனவே கடுமையான உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், தவெக நிர்வாகிகள் பள்ளிக்குள் புகுந்து ஆய்வு நடத்தியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
#rajmohan #tvk #thanthitv