சென்னை மாங்காட்டில் மளிகை கடை நடத்துவது போல கிலோ கணக்கில் குட்கா விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரை போலீசார் கைது செய்தனர். ரகசிய தகவலின் பேரில் பட்டூர் கூட்டு சாலை சந்திப்பு பகுதியில் உள்ள மளிகைக்கடைக்கு நேரடியாக சென்று அதிரடி சோதனை நடத்திய ஆவடி காவல் துணை ஆணையர் அய்மன் ஜமால், கடையில் இருந்த 55 கிலோ குட்காவை பறிமுதல் செய்தார். இதையடுத்து கடையை பூட்டி சீல் வைத்த போலீசார், கடையின் உரிமையாளர் செந்தில்குமாரை கைது செய்தனர்.