தமிழ்நாடு

Dengue | TN | வேகமாக பரவும் டெங்கு - இந்த ஒரே மாதத்தில் நடுங்கும் மாவட்டம்

வேகமாக பரவும் டெங்கு - இந்த ஒரே மாதத்தில் நடுங்கும் மாவட்டம்

thanthitv

Dengue | TN | வேகமாக பரவும் டெங்கு - இந்த ஒரே மாதத்தில் நடுங்கும் மாவட்டம் #ramanathapuram #dengue ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் நவம்பர் 1ஆம் தேதி முதல் தற்போது வரை 107 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், நூற்றுக்கணக்கானோர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மழைநீர் தேங்கும் இடங்களில் கொசுப்புழு ஒழிப்பு, கொசு மருந்து தெளித்தல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Sabarimala | சபரிமலையில் தரிசன முன்பதிவில் முறைகேடா? - இறங்கிய சைபர் பிரிவு

Fog | நாளை மறுநாள் முதல்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்

Today Gold Rate | இன்றும் இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

🔴LIVE :Gold Price | Gold | GoldPriceToday | இன்றும் சரிவு.. வந்து நின்ற விலை..

Untitled Nov 21, 2026 10:11 am