தமிழ்நாடு

கொசுக்கள் உற்பத்தியால் பரவும் " டெங்கு" - வடசென்னையில் பரவி வரும் டெங்கு காய்ச்சல்

வடசென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிழந்தனர். டெங்கு தொற்று பாதிக்கப்பட்ட 12-க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

தந்தி டிவி

தமிழகத்தில் பரவி வரும் டெங்கு சென்னையை யும் விட்டு வைக்கவில்லை. வடசென்னை பகுதிகளான திருவொற்றியூர், எண்ணூர், ராயபுரம், பகுதிகளில் சுகாதார சீர்கேடு நிலவுவதால், நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பலருக்கு எடுக்கப்பட்ட ரத்த மாதிரி சோதனையில் டெங்கு உறுதி செய்யப்பட்ட ஐந்து பேர் ஸ்டான்லி மருத்துவமனையிலும் ஐந்து பேர் தனியார் மருத்துவமனையிலும், இரண்டு பேர் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திருவொற்றியூர் பவானி என்ற பெண் கடந்த 10-ம் தேதி உயிரிழந்தார். கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவி வருவதாக அப்பகுதிமக்கள் குற்றஞ்சாட்டினர். இதேபோன்று எண்ணூரில் 13 வயது சிறுவனும் 21 வயது கல்லூரி மாணவனும் டெங்கு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.எண்ணூர் - மாலி என்பவரின் மனைவி ராஜேஸ்வரி என்பவர் 20 நாள் மருத்துவமனயில் சிகிச்சை பெற்று பலனின்றி உயிரிழந்தார்.

வடசென்னையை பொறுத்தவரை, எப்போதும் சுகாதார சீர்கேடு தலைவிரித்தாடும். இப்போது ஆங்காங்கே கழிவு நீர் தேங்கு, கொசுக்களை உற்பத்தி செய்யும் கேந்திரமாக மாறி உள்ளது. எனவே, தமிழக சுகாதாரத்துறை வட சென்னை பகுதிக்கு கூடுதல் கவனம் செலுத்தி போர்க்கால அடிப்படையில் டெங்கு பரவாமல் தடுத்து மக்களை காக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி