தமிழ்நாடு

டெங்கு காய்ச்சலுக்கு பெண் பலி : பொது மக்கள் போராட்டம்

டெங்கு காய்ச்சலுக்கு பெண் உயிரிழந்த நிலையில், சுகாதார நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டி, பொது மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

டெங்கு காய்ச்சலுக்கு பெண் உயிரிழந்த நிலையில், சுகாதார நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டி, பொது மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை கீழநாஞ்சில்நாடு பகுதியைச் சேர்ந்த கோபுவின், மனைவி சத்யாதேவிக்கு, 10 நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் அனுமதித்து, பின்னர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சத்யாதேவிக்கு, டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியான நிலையில், அவர் உயிரிழந்தார். இந்நிலையில், உரிய முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, பொதுமக்கள் தரங்கம்பாடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை டி.எஸ்.பி.வெள்ளத்துரை சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து சாலை மறியலை பொதுமக்கள் கைவிட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்