தமிழ்நாடு

நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க கோரிக்கை - நெல் மூட்டைகளை சாலையில் அடுக்கி போராட்டம்

நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க கோரிக்கை - நெல் மூட்டைகளை சாலையில் அடுக்கி போராட்டம்

தந்தி டிவி

நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க கோரிக்கை - நெல் மூட்டைகளை சாலையில் அடுக்கி போராட்டம்

மயிலாடுதுறை அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததை கண்டித்து விவசாயிகள் நெல் மூட்டைகளை சாலையில் அடுக்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மயிலாடுதுறை மாவட்டம் தேவன், உக்கடை, கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை அருண்மொழித்தேவன் பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வந்தனர். தற்போது குறுவை அறுவடை முடிவடைந்துள்ள நிலையில் 5 ஆயிரம் மூட்டை நெல் விற்பனைக்காக தயார் நிலையில் உள்ளது. பலமுறை கோரிக்கை விடுத்தும் அருண்மொழித்தேவன் நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது டிராக்டரில் எடுத்துவரப்பட்ட நெல் மூட்டைகள் சாலையின் நடுவே அடுக்கி வைக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து வட்டாட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு