தமிழ்நாடு

ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்க டெல்டா விவசாயிகள் கோரிக்கை...

காவிரியில், ஜூன் 12 -ஆம் தேதி தண்ணீர் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்டா விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி

நீரின்றி கல்லணை வறண்டு போய் உள்ளதால், தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. கடந்த 7 ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பொய்த்துப்போன நிலையில் இந்த ஆண்டு சம்பா சாகுபடி செய்ய முடியுமா என்ற கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. இதனிடையே, தஞ்சை மாவட்டத்தின் பல இடங்களில் மின் மோட்டாரை பயன்படுத்தி கோடை சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். 90 நாட்களுக்கு தண்ணீர் தொடர்ந்து கிடைத்தால் மட்டுமே முழுமையாக விவசாயம் செய்ய முடியும் என தெரிவித்துள்ள விவசாயிகள், மின்மோட்டார் நீரை வைத்து முழுமையாக விவசாயம் செய்ய முடியாது என தெரிவித்தனர். கிணற்று பாசனத்தால் மகசூல் குறைந்த அளவு தான் கிடைக்கும் என்றும், காவிரி நீர் வந்தால் மட்டுமே உரிய மகசூல் கிடைக்கும் என்றும், பயிரை காப்பாற்ற முடியும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர். ஜூன் 12 தண்ணீர் திறக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்