தமிழ்நாடு

செவிலியர்கள் பிரசவம் பார்த்த‌ விவகாரம் : 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மருத்துவர் இல்லாமல், செவிலியர்களே பிரசவம் பார்த்ததால், பெண் மரணமடைந்த விவகாரத்தில் 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

தர்மபுரி மாவட்டம், கோட்டப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் மனைவி பிரியா, மூன்றாவது பிரசவத்திற்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஆண் குழந்தை பெற்றெடுத்த அவர், அதிக ரத்தப்போக்கு காரணமாக இறந்ததாகக் கூறப்படுகிறது. பிரசவம் பார்த்தபோது மருத்துவர் இல்லாததாலும், அதேசமயம் அதிக ரத்தப்போக்கை செவிலியர்கள் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டியதாலும் பிரியா இறந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், சம்பவம் குறித்து தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனர், தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஆகியோர் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்