தமிழ்நாடு

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு... டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு

தந்தி டிவி

டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை மேலும் 14 நாள் நீட்டிக்கக் கோரி, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த மார்ச் 21ம் தேதி கைது செய்யப்பட்ட கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கெஜ்ரிவாலின் ஜாமின் நிறைவடைந்த பிறகு, அவருடைய நீதிமன்ற காவலை மேலும் 14 நாள்களுக்கு நீட்டிக்குமாறு அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை, வரும் ஜூன் 2-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா தெரிவித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்