தமிழ்நாடு

காற்று மாசு காரணமாக டெல்லியில் பெரும் பாதிப்பு - பெரு நகரங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை

காற்று மாசு காரணமாக டெல்லியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி

காற்று மாசு காரணமாக தலைநகர் டெல்லியில் பொது சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். தீபாவளி பண்டிகையின் போது வெடிக்கப்பட்ட பட்டாசு புகையாலும், அருகில் உள்ள அரியானா, பஞ்சாப் எல்லை பகுதிகளில் நெல், கோதுமை அறுவடை முடிந்து ஏராளமான வைக்கோல் தீயிட்டு எரிக்கப்படுவதால் ஏற்படும் புகை மூட்டத்தாலும் தற்போது டெல்லியில் காற்று மாசு பலமடங்கு அதிகரித்துள்ளது. இதனால் குழந்தைகள் பாதிக்கப்பட்டா வண்ணம் வரும் 5ஆம் தேதி வரை டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு அபாய கட்டத்தை தாண்டி விட்டதால் வீட்டை விட்டு வெளியே செல்லும் மக்கள் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என்றும், சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் டெல்வி வாழ் மக்கள் உடல்நலம் பாதிப்பு உள்ளிட்ட கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி