தமிழ்நாடு

அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரி ஸ்டாலின் தாக்கல் செய்த மனு விசாரணை மார்ச் 23-க்கு தள்ளிவைப்பு

தனக்கு எதிரான அவதூறு வழக்குகளை ரத்து செய்ய கோரி எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
மாநகராட்சி டெண்டர்கள் மத்திய அரசின் தரவரிசை பட்டியலின் படி மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதற்கான குறியீடுகளில் தமிழகம் முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டது மற்றும் குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக தமிழக அரசை விமர்சித்து ஸ்டாலின் பேசியது செய்தியாக வெளியானது. இந்நிலையில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஏப்ரல் 8-ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக ஸ்டாலினுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி ஸ்டாலின் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அமைச்சர் வேலுமணிக்கு எதிரான மாநகராட்சி டெண்டர் முறைகேட்டு வழக்கை திசை திருப்பும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள இந்த அவதூறு வழக்குகளுக்கு தடை விதிக்க வேண்டும் என ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். இதையடுத்து ஸ்டாலின் மனு மீது வரும் 23 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அன்றைய ​தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்