தமிழ்நாடு

பொன்னேரி அருகே தாழ்வாகச் சென்ற மின் கம்பியில் சிக்கி மான், பசுக்கள் பலி

பொன்னேரி அருகே தாழ்வாகச் சென்ற மின் கம்பியில் சிக்கி மான், பசுக்கள் பலி

thanthitv

திருவள்ளூர் மாவட்டம் அனுப்பம்பட்டு பகுதியில் தாழ்வாகச் சென்ற மின்சாரக் கம்பியில் சிக்கி புள்ளிமான் ஒன்றும், இரண்டு பசுக்களும் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தன.

பசுக்களை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற உரிமையாளர் அனிதா என்பவர் சற்றுப் பின்னால் சென்றதால் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர்தப்பினார். கடந்த மூன்று மாதங்களாக மின்வயர் தாழ்வாக இருப்பது குறித்துப் புகார் அளித்தும் மின்வாரிய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கிராம மக்கள் ஆவேசத்துடன் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனிடையே, சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய அதிகாரியிடம் பொதுமக்கள் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாமல் போனது குறித்து கேட்டபோது, அவர் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து மீஞ்சூர் காவல்துறையினரும் வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

#Tiruvallur #Deer #Death #thanthitv

Uttarpradesh | வெடித்து சிதறிய கடல் கன்னி தொட்டி.. 15 பேருக்கு நேர்ந்த கதி.. அலறி துடித்த குழந்தைகள்

CM Vijay | TVK |தமிழ்நாடே `தவெக கல்வி விருது'க்கு வெயிட்டிங் - முக்கிய வேலையை கையில் எடுத்த CM விஜய்

Govt Bus தீபாவளிக்கு அரசு பேருந்தில் சொந்த ஊர் செல்லும் மக்கள் சென்னை புக்கிங்.. வெளியான Data

Delhi Protest | பெண் பத்திரிகையாளர் பாலியல் புகார்.. டெல்லி போலீசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Chennai | "போன்ல பேசுனது போதும் நேர்ல வாங்க"`ஆசை'யோடு சென்றவருக்கு நடந்த கொடூரம்