கொரோனா தாக்கம் காரணமாக இந்தியாவில் 80 சதவீத பணப்புழக்கம் குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இந்தியா முழுவதும், வர்த்தக நிறுவனங்களை மூடுவதற்கு அரசு வலியுறுத்தி உள்ளது. இதையடுத்து 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் 80 சதவீத பணப்புழக்கம் குறைந்துள்ளது. பொருட்களின் தேவை மற்றும் விநியோகத்தில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்