கல்வி வியாபாரமானது தான் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்ததர்க்கு காரணம் என அமைச்சர் பாஸ்கரன் குற்றம் சாட்டியுள்ளார். சிவகங்கை அரசு மன்னர் பள்ளியில் நடைபெற்ற விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டார். இவ்விழாவில் பேசிய அவர், அரசு பள்ளிகளில் தற்போது ஆங்கில வழி கல்வி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளது என கூறினார்.