ஆற்றில் குளிக்க சென்ற இளைஞர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாமிரபரணி ஆற்றில் தனது நண்பருடன் குளிக்க சென்ற 24 வயது இளைஞர் ஆழமான இடத்திற்கு சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்தார். நீரில் மூழ்கிய முனியசாமிபுரத்தை சேர்ந்த சித்திரை குமாரின் உடலை 3 மணிநேர தேடலுக்குப்பின் தீயணைப்புத்துறையினர் மீட்டனர். உடலை பார்த்து சித்திரை குமாரின் தாயார் கதறி அழுதது அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.