தமிழ்நாடு

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா மரணம்

தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கை 251ஆக உயர்ந்துள்ள நிலையில், அதிக பட்சமாக நேற்று ஒரே நாளில்19 பேர் மரணம் அடைந்தது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் இளம்வயதினர் உயிரிழப்பு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, நேற்று உயிரிழந்த 19 பேரும் சென்னையை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. அதன்படி, 5ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 31 வயது இளைஞருக்கு கொரோனா உறுதியான நிலையில், அவர் திடீர் மரணம் அடைந்ததாக சொல்லப்பட்டுள்ளது. அதேபோல் 30 வயது இளைஞர் ஒருவர் 4ஆம் தேதி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், 5ஆம் தேதி திடீரென இறந்துவிட்டதாக சுகாதாரத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 39 வயதுடைய நபர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று தினங்களில் இறந்ததாகவும் 43 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், 30ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில், 5ஆம் தேதி உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது . சென்னையை சேர்ந்த 67 வயது முதியவர் 4ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு, 5ஆம் தேதி இறந்ததாகவும், அவருக்கு பிறநோய் பாதிப்பு இருந்ததாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இறந்தவர்களுக்கு, பெரும்பாலும், சர்க்கரை மற்றும் பிற நோய் பாதிப்பு இருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்