தமிழ்நாடு

இறந்த மனைவி... அழுகிய உடல்.. நைசா பேசி பலே பிளான் போட்ட கணவன்.. மோப்பம் பிடித்த போலீஸ்

தந்தி டிவி

சாத்தான்குளம் அருகே உள்ள கூவன்கிணறு பகுதியை சேர்ந்த அந்தோணிராஜ் - ஜான்சிராணி கீதா தம்பதிக்கு, தலா 7 வயதில் மகன் மற்றும் மகள் உள்ளனர். கடந்த 21ம் தேதி இருவரும் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றபோது, கணவர் அந்தோணி ராஜ் மட்டும் வீட்டிற்கு திரும்பி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த ஜான்சிராணியின் உறவினர்கள், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதற்கிடையே அதே தினத்தில், அந்தோணிராஜ் தைலாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், இடச்சிவிளை தேரிகாட்டு பகுதியில், அழுகிய நிலையில் கிடந்த உடல் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, அது காணாமல் போன ஜான்சிராணி கீதா என தெரியவந்தது. இதுதொடர்பான விசாரணையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவிக்கு இடையேயான பிரச்சினையில், கணவர் அந்தோணி ராஜ், தனது காலால் மனைவியின் கழுத்தில் மிதித்துக் கொன்றுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றது சிசிடிவி காட்சி மூலம் போலீசார் கண்டறிந்தனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்