தமிழ்நாடு

வீட்டில் அழுகிய நிலையில் சடலம் - உடலை எடுக்க விடாமல் பாசப் போராட்டம் நடத்திய நாய்

தந்தி டிவி

திருச்சியில் இறந்தவரின் உடலை எடுக்க விடாமல் பாசப் போராட்டம் நடத்திய நாயால் அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

மலைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மதியழகன். தனது தாயாரின் இறப்பிற்குபின் மதுவுக்கு அடிமையான இவர், நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 4 நாட்களாக மதியழகனின் நடமாட்டம் இல்லாததோடு அவரின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின்னர், போலீசார் வீட்டிற்கு வந்த பார்த்தபோது மதியழகன் இறந்து அழுகிய நிலையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனை அனுப்ப போலீசார் முயன்ற நிலையில், அவர் வளர்த்து வந்த நாய் யாரையும் நெருங்க விடாமல் குரைத்துள்ளது. பின்னர், நாய் பிடிக்கும் ஊழியர்களை வர வழைத்து நாயை பிடிக்க அங்கிருந்து தப்பி ஓடியது. இதையடுத்து, உடலை மீட்ட போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்