தமிழ்நாடு

சொத்துக்களை பறித்த மகள்கள் - மீட்டு ஒப்படைத்த கோட்டாட்சியர்...

மதுரை அருகே முதியோர் இல்லத்தில் பெற்றோரை விட்டதால் 2 மகளிடமிருந்து சொத்துக்களை மீட்டு வயதான தம்பதியினரிடம் கோட்டாட்சியர் ஒப்படைத்தார்.

தந்தி டிவி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள திருநகர் பாண்டியன் நகரை சேர்ந்த அழகர்சாமி மற்றும் அவரின் மனைவியை திருப்பரங்குன்றத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு 2 மகள்கள் சென்று விட்டனர்.

மிகவும் கஷ்டப்பட்ட வயதான அழகர்சாமி தம்பதியர் சொத்துக்களை மகள்கள் பறித்து கொண்டு தங்களை அனாதையாக விட்டு விட்டு சென்றதாக தமிழ்நாடு மூத்த குடிமக்கள் நல ஆணையத்தில் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் திருமங்கலம் கோட்டாட்சியர் முருகேசன் விசாரணை மேற்கொண்டார். அழகர்சாமி , மனைவி சகுந்தலா மற்றும் அவர்களது இரு மகள்கள், உதவியாக உள்ள கணேசன் ஆகியோரை நேரில் வரவழைத்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார். பெற்றோரை கவனிக்காமல்விட்ட 2 மகள்கள் அபகரித்து கொண்ட 70 லட்சம் மதிப்புள்ள வீட்டின் பத்திர பதிவை ரத்து செய்த கோட்டாட்சியர் 90 பவுன் நகை மற்றும் காரை மீட்டு அழகர்சாமியிடம் ஒப்படைக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனால் அழகர்சாமி மற்றும் அவரது மனைவி சகுந்தலா மகிழ்ச்சி அடைந்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி