தமிழ்நாடு

மகளின் மஞ்சள் நீராட்டு விழாவுக்காக உறவினரை எரித்து கொன்ற கொடூர தாய் - இதுக்கெல்லாம் கொலையா?

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஆண் நண்பரிடம் கொடுத்த நகைகளை மறைக்க தனியாக இருந்த உறவினரை கொன்று எரித்த சம்பவத்தில் 17 வயது சிறுவன், தாய் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

புங்கம்பாடி பாரவலசு பகுதியைச் சேர்ந்த பழனிசாமி கடந்த 20-ம் தேதி விவசாய தோட்டத்தில் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சந்தேகத்தின் பேரில் பழனிசாமி மனைவியின் சகோதரனான தங்கமணி மனைவி மாசிலாமணியிடம் விசாரணை நடத்தியபோது, திடுக்கிடும் தகவல் வெளியானது. தங்கமணியுடன் நூல் மில்லில் வேலை பார்த்துவந்த தர்மபுரியைச் சேர்ந்த தமிழனுக்கும், மாசிலாமணிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாசிலாமணி தனது மகளுக்காக வைத்திருந்த 10 பவுன் நகையை தமிழன் வாங்கியிருந்த கடனை அடைக்க கொடுத்துள்ளார். உறவினர் யாராவது இறந்தால் தான் தனது மகளின் பூப்புனித நீராட்டுவிழாவை தள்ளிப்போட முடியும் என திட்டம் தீட்டி தங்கமணியின் சகோதரியின் கணவரான பழனிச்சாமியை கொலை செய்ய மாசிலாமணி, தமிழன் ஆகியோர் திட்டமிட்டு கொலையை அரங்கேற்றியதாக போலீசார் தெரிவித்தனர். கொலைக்கு உடந்தையாக மாசிலாமணியின் 17 வயது மகனும் இருந்துள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி