தி.மலையில் 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்..
#Tiruvannamalai #Annamalaiyartemple #thanthitv
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 4 முதல் 6 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள், 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர். பௌர்ணமி கிரிவலம் நேற்று இரவு 11.06 மணிக்கு தொடங்கி, இன்று இரவு 10.44 மணி வரை நடைபெற்றது. கிரிவலம் முடித்த பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் குவிந்து வருகின்றனர்.