தமிழ்நாடு

பகல் நேரத்தில் ஊருக்குள் உலா வரும் அபாயம்.. பீதியில் மக்கள்

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் உதகையை சுற்றியுள்ள கிராமங்களில் குடியிருப்புப்பகுதிக்குள் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் உதகை அருகே தேவர்சோலை கிராமத்தில் பகல் நேரத்தில் கரடி ஊருக்குள் உலா வந்ததை கண்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர். வனப்பகுதிக்குள் இருந்து நடைபாதையில் ஒய்யாரமாக நடந்து வந்த கரடி, மக்கள் நடமாட்டத்தை பார்த்து மீண்டும் வந்த வழியே சென்றுள்ளது. மேலும் விநாயகர் கோவில் பகுதிக்கு உணவு தேடி வந்த கரடியின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனால் அச்சமடைந்த மக்கள் கரடியைப் பிடித்து வனப்பகுதிக்குள் விடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். 

Iran Israel War | அமெரிக்காவில் அதிர்ச்சி பதவி நீக்கம்.. ஈரான் போர் நடுவே எதிர்பாரா திருப்பம்

BJP Candidate List | பிரதமர் மோடி வரும் சூழலில் - பாஜக வேட்பாளர் பட்டியலில் திடீர் திருப்பம்

#BREAKING || Velliangiri Hills | அடுத்த அதிர்ச்சி.. வெள்ளியங்கிரி மலை ஏறிய மேலும் ஒரு இளைஞர் மரணம்

Coimbatore | DMK | "மோடி இங்க வந்தா நம்ம இலக்கு உறுதி..." - கோவை மண்ணை அதிரவிட்ட CM ஸ்டாலின்

Breaking | ECI | Collector | ஆட்சியர்கள் மாற்றம்.. ECI அடுத்தடுத்த அதிரடி