தாமோதரன் பிரகாஷ் கைது - காரணம் இதுதான் சென்னையில் யூடியூப் பெண் தொகுப்பாளினி குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக அளிக்கப்பட்ட புகாரில், பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் கைது செய்யப்பட்டார். கடந்த ஜனவரி மாதம், பெண் தொகுப்பாளினி குறித்து அவதூறான கருத்துகளுடன் அவரது புகைப்படத்தை பயன்படுத்தி வீடியோ வெளியிடப்பட்டதாக ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து BNS, தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், வழக்கில் தொடர்புடைய பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.