அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 20 மாணவர்களுக்கு, தினத்தந்தி நிறுவனம் சார்பில் கல்வி நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், அரியலூர் ஆட்சியர் ரத்னா, மாணவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன், பள்ளி தாளாளர் அலெக்சாண்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.